லைஃப்ஸ்டைல்

2025 ன் சிறந்த Natural Hair Growth Tips

90 / 100 SEO Score

Natural Hair Growth Tips: இயற்கையில் கிடைக்கக்கூடிய விஷயங்களைக் கொண்டு நாம் தலைமுடியை பாதுகாக்கவும் , வளர்ச்சியை மீட்டெடுக்கவும் முடியும், தலை முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தக்கூடிய இயற்கையான பொருட்களையும், அவற்றை பயன்படுத்தும் முறையும் பயன்படுத்தும் முறையையும் கொடுத்துள்ளேன். அதனை உறுதி செய்யும் ஆய்வு முடிவுகளும் உங்களுக்காக தரப்பட்டுள்ளது.

  1. தலைமுடிக்கு மசாஜ் செய்வோம் , தலைமுடி உதிர்வை தவிர்ப்போம் 

                                                                                                                                                                                  தலைமுடிக்கு மசாஜ் செய்யும் போது தலைமுடி வேர்களுக்கு அது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது ,  1992 இல் வந்த  ஒரு ஆய்வின் மூலம்,  நாளொன்றுக்கு வெறும் 4 நிமிடம் மசாஜ் என்பதே போதுமானது , ஒன்பது நபர்களை வைத்து 24 வாரம் ஆராய்ச்சி செய்ததன் முடிவில் அவர்களின் முடியின் அடர்த்தி முன்பிருந்ததை விட அதிகமாக இருப்பதை உறுதி செய்து இருக்கிறார்கள்.
தலைமுடி மசாஜ் செய்யும் முறை 
 
 
தலைமுடி மசாஜ் செய்யும் போது தலையில் உங்கள் விரல்களின் நுனிகள் மட்டும் படும்படியாக செய்யவும் 
 
1.  உங்களது இரண்டு கைகளில் உள்ள விரல் நுனிகளை மட்டும் பயன்படுத்தி, மிக மெதுவான அழுத்தம் கொடுத்து சின்ன சின்ன வட்ட வடிவில் மசாஜ் செய்யவும் 
 
2. தலையின் எல்லா பகுதிகளிலும் உங்கள் விரல் நுனிகள் மூலமாக முழுமையாக ஐந்து நிமிடம் மசாஜ் செய்யவும், 5 நிமிடத்தில் பலமுறை நாம் மசாஜ் செய்து விட முடியும்.
 
3 . அதுமட்டுமில்லாமல், குளிக்கும்போதும் விரல் நுனிகளை பயன்படுத்தி, மென்மையான ஷாம்பு போட்டு, ஐந்து நிமிடம் எப்போதும் போல மசாஜ் செய்யவும், பின்பு  தலைமுடியை கழுவவும். உங்கள் உங்கள் தலைமுடியின் அடர்த்தி அதிகம் ஆவதை சில வாரங்களில் நீங்கள் உணர்வீர்கள். 
 
  • ஆதாரம்: NCBI / e Plasty Journal

  • ஆய்வு: Standardized Scalp Massage Results in Increased Hair Thickness by Inducing Stretching Forces to Dermal Papilla Cells in the Subcutaneous Tissue

2. தியானம் மன அழுத்தத்தை மட்டுமல்ல, முடி உதிர்வை கூட குறைக்கும் 

அதிக மன அழுத்தத்தால் முடி முடி உதிர்வு அதிகரிக்கும் என்ற நிலை ஏற்படுகிறது. 
இதைத் தவிர்க்க தியானம் மற்றும் யோகா மூலம் மன அமைதி கூட்டினால், ஸ்ட்ரெஸ் ஹார்மோன் என்று அழைக்கப்படும் Cortisol ஹார்மோன் சுரப்பது குறைந்து முடியின் வளர்ச்சி அதிகமாகும் என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் உள்ளது.

2025 ன் சிறந்த Natural Hair Growth Tips
Natural Hair Growth Tips


Natural Hair Growth Tips: தினமும் 10 முதல் 15 நிமிடம் நாம் தனிமையில் உட்கார்ந்து மூச்சு உள்ளே வருவதையும் வெளியே போவதையும் கவனித்துக் கொண்டிருக்கும் விபாசனா என்ற எளிய தியான பயிற்சி செய்வது போதுமானது.

ஆதாரம் 

ஆதாரம்: Mayo Clinic

ஆய்வு: Meditation for Stress Reduction & Hair Growth

3.DHT  – Dihydrotestosterone

Dihydrotestosterone என்ற ஹார்மோன் ஆண்களுக்கும்,  பெண்களுக்கும் மரபு ரீதியாக  முடி கொட்டுதல். அதாவது அப்பாவுக்கு அல்லது அம்மாவுக்கு ‌ முடி உதிர்வு இருந்தால் அதை நமக்கும் ஏற்படுத்தும் ஒரு ஹார்மோன், ஆனால் அதையும் சில இயற்கையான உணவுகளை உண்பதன்‌மூலம் தடுக்க முடியும். அவை பச்சை தேயிலை, மஞ்சள் மற்றும் பூசணி விதைகள்.

  • ஆதாரம்: Healthline

  • ஆய்வு: DHT and Hair Loss (Effects and Natural Remedies)

3. கற்றாழையின் மூலம் பொடுகை விரட்டலாம்

கற்றாழை ஜெல் அரிப்பு,  (Natural Hair Growth Tips) அதேபோல தலையில் உள்ள பொடுகு பிரச்சனைக்கும் தீர்வாக அமையும் என்ற Aloe vera in the treatment of seborrheic dermatitis (Journal of Dermatological Treatment, 1998) நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கற்றாழை ஜெல் முடியின் வேர் வரை சென்று தலைப்பகுதியின் மேல் உள்ள தேவையில்லாத மாசு படிமங்களை (மற்ற ரசாயன ஹேர் கிரீம்,  ஷாம்பூ போன்று முடியை பாதிக்காமல் )நீக்க உதவுகிறது.
 
2025 ன் சிறந்த Natural Hair Growth Tips
Natural Hair Growth Tips

பயன்படுத்தும் முறை

 
Natural Hair Growth Tips: புதிய கற்றாழை ஜெல்லை எடுத்து அதை தலைமுடியில் பொறுமையாக மசாஜ் செய்யவும் 30 நிமிடம் ஊற விட்டு பின்பு (முடியை பாதிக்காத மென்மையான ஷாம்பு பயன்படுத்தி) கழுவவும்.
கற்றாழை ஜெல்லில் Vitamin A , C, E , B12 மற்றும்  Folic Acid போன்றவை உள்ளதால் அது முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.
 
 இது வெகு சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். Natural Hair Growth Tips அதனால் பயன்படுத்தும்
முன்பு, கற்றாழை ஜெல்லை கை, கால்களின் தோல் பகுதியில் தேய்த்து இரண்டு மணி நேரம் பொறுத்திருந்து எந்த அலர்ஜியும் ஏற்படாவிட்டால், தாராளமாக பயன்படுத்தலாம்.
.
  • ஆதாரம்: Healthline

  • ஆய்வு: Aloe Vera for Hair: Benefits for Hair Growth
    (Source: Journal of Dermatological Treatment, 1998)

4. Vitamin D and Hair Loss

 வைட்டமின் டி முடி வளர்ச்சி மிக முக்கியமான ஒரு வைட்டமின். வைட்டமின் டி குறையும்போது முடி உதிர்வு அதிகமாகும். 
 
  விட்டமின் டி பெற நீங்கள் தினமும் 15 முதல் 20 நிமிடம் சூரியன் ஒளியில் என்ற போதுமானது.
 
  விட்டமின் டி பால் முட்டை மற்றும் தயிர் போன்ற உணவுகளும் அதிகமாக உள்ளது. 
 
 விட்டமின் டி குறைபாடு முடி வளர்ச்சியை பாதிக்கும் என்ற ஆய்வும் வெளிவந்துள்ளது.  அதுவே எப்போதும் வீட்டு வீட்டுக்குள்ளேயே இல்லாமல் அவ்வப்போது மாலையில் சூரிய ஒளியில் நிற்பது வைட்டமின் டி உருவாக்கும் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
;
  • ஆதாரம்: Cleveland Clinic

  • ஆய்வு: Can Vitamin D Deficiency Cause Hair Loss?

 
5. தமிழர்களின் நூற்றாண்டு பாரம்பரியம் கருவேப்பிலை 
 
 கருவேப்பிலை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் உணவு மற்றும் அதுவே மருந்து இன்றுவரை தமிழர் பாரம்பரியம் அதை பயன்படுத்தி வந்தது. 
 
இதில் உயர்ந்த அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், விட்டமின்கள் குறிப்பாக விட்டமின் பி, சி மற்றும் அமினோ அமிலங்கள் , இரும்பு சத்து போன்றவை இருப்பதால் முடியின் வேர்களை பயன்படுத்தி முடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது. 
 
அது மட்டும் இல்லாமல் நரைமுடி தோன்றுவதையும் இது தள்ளிப்போடும் படும் , தடுக்கும்.
 
 
கருவேப்பிலை  பயன்படுத்தும் முறை 
 
Natural Hair Growth Tips வெறும் 10 அல்லது 15 கருவேப்பிலை இலை எடுத்து, அளவாக தண்ணீர் சேர்த்து, அரைத்து தலையின் மேல் பகுதியில் இரண்டு கை விரல்களின் நுனிகளாலும் மெதுவாக மசாஜ் செய்து , ஒரு 30 நிமிடம் இடைவெளி விட்டு அலசி விட வேண்டியதுதான். இது போல செய்யும் போதுஉங்கள் முடியின் வேர்களை நேரடியாக சென்று ஊட்டமளிக்கும். 
 
 
  • ஆதாரம்: ResearchGate

  • ஆய்வு: Curry leaves (Murraya koenigii) in Hair Growth Promotion: A Traditional Review

6. தேங்காய் எண்ணெய் 

Natural Hair Growth Tips: இவ்வளவு விஷயங்களை பேசிவிட்டு தேங்காய் எண்ணெய் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. தேங்காய் எண்ணெயில் உள்ள விட்டமின் E, லாரிக் ஆசிட் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
 
 எனவே வாரத்திற்கு  இரண்டு அல்லது மூன்று முறை பசுமையான தேங்காய் எண்ணெய் எடுத்து இரவு தலைமுடியில் மசாஜ் செய்து,  காலையில் குளிக்கும் போது அது மிகுந்த பயன்களை தருகிறது.
       தேங்காய் எண்ணெயானது தலைமுடியின் வேர்ப்பகுதிக்கு நேராக சென்று தேவையான ஈரப்பதத்தை வழங்கி முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. 
 

Journal of Cosmetic Science என்ற ஆய்வின் முடிவில் தேங்காய் எண்ணெய் ஆனது முடியின் வேர்களில் ஆழமாக ஊடுருகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல தேங்காய் எண்ணையுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து தடவுவதும் முடி வளர்ச்சிக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும், 
 
  • ஆதாரம்: NCBI

  • ஆய்வு: Journal of Cosmetic Science

   
 
7. தயிர் 
 
தயிர் என்பது மிக முக்கியமான உணவு அதில் புரதம் மற்றும் பிளாஸ்டிக் ஆசிட் அதிகமாக உள்ளதால் அது தலைமுடி செல்களை தூண்டி புதிய முடி வருவதற்கு வழி செய்யும். 
 
தயிருடன் வெந்தயம் சேர்த்தோ அல்லது தயிருடன் கருவேப்பிலையை சேர்த்தோ, தலைமுடிக்கு வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்துவது, தலைப்பகுதியில் வறட்சியை குறித்து முடியும் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் என்று ஆய்வு முடிவுகளும் வந்துள்ளது.
 
  • ஆதாரம்: PubMed

  • ஆய்வு: Fermented Milk & Scalp Health

முடிவுரை 

 
தலைமுடி என்பது நம்முடைய அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் மிக அவசியமானது. ஆகவே இழந்தபின் அதை நினைத்து வருந்துவதற்கு இருக்கும்போதே அதை சரியாக பராமரித்து பாதுகாப்பது மிக முக்கியமானது.  வாரத்தில் இரண்டு முறை தலைக்கு எண்ணெய் தடவுவது, ஹெர்பல் ஷாம்புகளை மட்டுமே பயன்படுத்துவது , தலைப்பகுதியில் மசாஜ் செய்வது, நன்றாக தூங்குவது , மன அமைதியுடன் இருப்பது ஆகியவை முடியை பாதுகாப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள். 
 
அதேபோல அதிக வெப்பம் உள்ள இடங்களை தவிர்ப்பது,  ரசாயன கலரிங் , டை போன்ற விஷயங்களை முடிப்பகுதியில் பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்க வேண்டிய ஒன்று.
 
 போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள், முடி வளர்ச்சிக்கு அதுவும் அவசியமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button